மின்சாரம் பாய்ந்து 3 பசுக்கள் பலி பாதிக்கப்பட்டவர்களுக்கு ராஜா எம்எல்ஏ ஆறுதல்

சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து 3 பசுக்கள் பலியானதை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற ராஜா எம்எல்ஏ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.சங்கரன்கோவில் அருகேயுள்ள இலவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குருநாதன் மற்றும் கடல். இவர்களுக்கு சொந்தமான பசு மாடுகள் கடந்த 21ம்தேதி வழக்கம்போல் அப்பகுதியில் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராவிதமாக வயலில் தாழ்வாக சென்ற மின்வயர் 3 பசுக்கள் மீது பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்த மின்ஊழியர்கள் உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பைத் துண்டித்தனர்.

மின்சாரம் பாய்ந்து மாடுகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, அப்பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். நிகழ்வில் சங்கரன்கோவில் யூனியன் துணை சேர்மன் செல்வி கோட்டூர்சாமி, கிளை செயலாளர்கள் இலவன்குளம் திருப்பதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், நகர மாணவரணி அமைப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: