கீழ்வேளூர் : கீழ்வேளூர் ஒன்றியம் நாகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் ரோஹித் என்எம்எம்எஸ் ஸ்காலர்ஷிப் தேர்வில் வெற்றிபெற்றார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்காக ஒவ்வொரு வருடமும்என்.எம்.எம்.எஸ். ஸ்காலர்ஷிப் போட்டி தேர்வு வைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் நாகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களில் ரோஹித் என்ற மாணவன் என்.எம்.எம்.எஸ். தேர்வில் வெற்றி பெற்று மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் பனிரெண்டாம் வகுப்பு வரை ரூ.48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தேர்வாகினார்.
இதையடுத்து பள்ளிக்கு வருகை தந்த வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணியன் ஸ்காலர்ஷிப் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் ரோகித்தையும், ஊக்கப்படுத்திய தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி, கணித ஆசிரியர் லோகநாதன் மற்றும் பள்ளியின் பிற ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
