கடந்த மாத மின் கட்டணத்தை இம்மாதம் செலுத்த அறிவிப்பு

சோமனூர்,பிப். 17: கருமத்தம்பட்டி மின்பகிர்மான நிலைய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3 ஆயிரத்து 800 மின் இணைப்புகள் உள்ளன. அதிகளவில் வீட்டு இணைப்புகள் விசைத்தறி கூடங்கள் மற்றும் கடைகளுக்கு இந்த இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இம்மாத மின் கணக்கீடு தவிர்க்க முடியாத காரணத்தினால் மின் கணக்கீடு செய்யப்படவில்லை. அதனால் கடந்த முறை டிசம்பர் மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்ட மின் கட்டண தொகையையே மீண்டும் இந்த மாதமும் செலுத்தும்படி சோமனூர் துணை மின் நிலைய செயற்பொறியாளர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Related Stories: