சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் சந்திப்பு

 

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் சந்தித்துள்ளார். புதுச்சேரியில் நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது. புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ஆலோசனையில் புதுச்சேரி திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். NDA கூட்டணி தொகுதிப்பங்கீட்டை முடித்த நிலையில், காங்கிரஸ் – திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு
இன்னும் முடிவுக்கு வரவில்லை.

Related Stories: