சென்னை: நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம். பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணங்கள், விதிகள் ஏப்.1 முதல் அமலாகின்றன. எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.10,000க்கு மேல் பணம் எடுத்தால் ஏப்.1 முதல் ஒடிபி உள்ளீடு கட்டாயம். கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம்.களில் 5 முறை இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். பிற வங்கி ஏடி.எம்.களில் மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். கணக்கு இல்லாத வங்கி ஏ.டி.எம்.களில் மெட்ரோ நகரங்களில் முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இலவச பரிவர்த்தனை முடிந்துவிட்டால் ஏ.டி.எம். மற்றும் யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
