பாலக்காடு மாவட்டத்தில் 12 தொகுதிகளுக்கான இடதுசாரி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

 

பாலக்காடு, மார்ச் 17: கேரளாவில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.9ம் தேதி நடைபெறுகிறது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பாலக்காடு மாவட்டத்தில் 12 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியது. இதில் மா.கம்யூ., தலைமையிலான இடதுசாரி முன்னணி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் கட்சி மேலிடம் வெளியிட்டுள்ளது.
அதில் 8 இடங்களிலும் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் மீண்டும் போட்டியிடுவர் எனவும், மற்ற 4 தொகுதிகளில் புதுமுக வேட்பாளர் போட்டியிடுவர் எனவும் கட்சியின் தலைமைச்செயலாளர் கோவிந்தன் அறிவித்துள்ளார்.
திருத்தாலாவில் ராஜேஷ், பட்டாம்பியில் முகமது ரியாஷ், ஒத்தப்பாலத்தில் வக்கீல் பிரேம்குமார், ஷொர்ணூரில் மம்மிக்குட்டி, மன்னார்க்காட்டில் மன்பில் பக்கர், கோங்காட்டில் வக்கீல் சாந்தகுமாரி, மலம்புழாவில் பிரபாகரன், சித்தூரில் வக்கீல் முருகதாஸ், நெம்மாராவில் பிரேமன், ஆலத்தூரில் சசி, தரூரில் சுமேஷ், பாலக்காட்டில் ரஷாக் ஆகியோர் மா.கம்யூ., தலைமையிலான இடதுசாரி முன்னணி வேட்பாளர்கள் பட்டியலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related Stories: