டெல்லி அடிமை எடப்பாடி: ஓபிஎஸ் தாக்கு

 

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடமலை-மயிலை ஒன்றியம் பகுதியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் திமுக பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதாவை முதலமைச்சராக்கிய பெருமை இந்த ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு உள்ளது. 9 அமைச்சர்களை ஜெயலலிதா பொறுப்பிலிருந்து நீக்கியபோது, நான் அவரிடம் பேசி அதை தடுத்து நிறுத்தினேன். நான் ஆதரவு தெரிவித்ததால்தான் எடப்பாடி நான்கரை ஆண்டுகள் பதவியில் இருக்க முடிந்தது.

அந்த நன்றி கூட இல்லாமல் என்னை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று ஈடுபட்டார். அதைத்தான் நான் எதிர்த்தேன். எடப்பாடி பழனிசாமி அரசை காப்பாற்றியது, கட்சியில் அவருக்கு இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை ஒப்புக்கொண்டது தான் அரசியலில் நான் செய்த மிகப்பெரிய தவறு. டெல்லியில் உள்ளவர்கள் இங்கு வந்து பேசுகின்ற நிலைமையை மாற்றி, டெல்லி சென்று அவர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அடிமையாகி உள்ளார். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: