போலீஸ் விசாரணையில் இறந்த வழக்கு ஆகாஷ் பெற்றோரிடம் சிபிசிஐடி வாக்குமூலம்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் மகன் ஆகாஷ் டெலிசன்(26). கடந்த 7ம் தேதி போலீசார் விசாரணையின்போது மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்படி சிபிசிஐடி போலீசார், வழக்குப்பதிந்து 11 போலீசாருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆகாஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி ேபாலீசார் விசாரணை செய்தனர். நேற்று மீண்டும் டிஎஸ்பி ஜாய் தங்கம், இன்ஸ்பெக்டர் கீதா, எஸ்ஐ சிவகுமார் தலைமையிலான போலீசார், ஆகாஷ் டெலிசனின் தந்தை ராஜேஷ் கண்ணன், தாய் ஆனந்தி ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அவர்களது பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

Related Stories: