தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கின் மனு பொதுவெளியில் கசிந்தது எப்படி? தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி; செங்கல்பட்டு மாவட்ட நீதிபதி பதில்

சென்னை: கடந்த மாதம் தவெக தலைவரும், நடிகருமான விஜய்-சங்கீதா விவாகரத்து மனு பொதுவெளியில் கசிந்து பேசுபொருளாகியது. சட்டப்படி குடும்பநல நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள், மிகவும் பாதுகாப்பாக மனுதாரார், எதிர்மனுதரர் தரப்பு விவரங்கள் பாதுகாப்பாக மறைக்கப்பட்டு இருக்கும். இணையதளத்தில் கூட மனுதாரரின் எதிர்மனுதாரர் பெயர் விவரங்கள் மறைக்கப்பட்டு தான் இருக்கும். இப்படி இருக்கையில் சங்கீதாவின் மொத்த மனுவும் தொடர்ச்சியாக குறிப்பிட்ட சில தேதிகளில் பொதுவெளியில் கசிந்தது எப்படி என்று அனைவரும் குழம்பி போய் இருந்தனர்.

இது தொடர்பாக கடந்த 8ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்ய சோழன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு உடனடியாக செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி சந்திரசேகரன் பதில் அளித்து உள்ளார். அதில், மனு பொதுவெளியில் கசிந்தது தொடர்பாக ஏதாவது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா என்று கேள்விக்கு நீதிபதி, எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று பதில் அளித்து உள்ளார்.

மனுதாரர் in camera proceeding கேட்டுள்ளார், இருந்த பொழுதும் மனு கசிந்து உள்ளது. இதற்கு மனுதாரர் தரப்பில் இருந்து ஏதாவது புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளதா என்று கேள்விக்கு, மனுதாரர் தரப்பு நடவடிக்கை கோரி எந்த புகாரும் கொடுக்கவில்லை என்று நீதிபதி பதில் அளித்து உள்ளார். விவாகரத்து மனு கசிந்தது தொடர்பாக நீதிமன்றம் ஏதாவது தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதா என்ற கேள்விக்கு, நீதிமன்றம் தானாக முன்வந்து எந்த வழக்கும் பதியவில்லை என்று பதில் அளித்து உள்ளார்.

மனு நீதிமன்ற வளாகத்தில் இருந்து கசிந்து இருந்தால் மனுவில் நீதிமன்ற முத்திரை இருந்து இருக்கும். கசிந்த மனுவில் அவ்வாறு நீதிமன்ற முத்திரை எதுவும் இல்லை. வேறு யாராவது வெளியிட்டு இருந்தால் கண்டிப்பாக அது சட்டப்படி குற்றம் எனவும், உடனடியாக மனுதாரர் தரப்பு புகார் தெரிவித்து இருக்க வேண்டும் எனவும், அப்படி ஏதும் புகார் செய்யவில்லை என்பதும் உறுதியாகிவிட்டதாகவும் சங்கீதா தரப்பில் இருந்துதான் மனு வெளியாகி உள்ளதாக ஆதித்ய சோழன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: