பழநி, மார்ச் 16: பழநி மற்றும் தொப்பம்பட்டி பகுதியில் மார்க்சிஸ்ட் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி பழநி அருகே முத்துநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கிளை நிர்வாகி செல்வராஜ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சமையல் காஸ் விலையை உயர்த்த கூடாது. தட்டுபாடின்றி காஸ் விநியோகத்தை உறுதிபடுத்த வேண்டும்.
ண்ணெய் வளத்தை கொள்ளை அடிப்பதற்கான ஈரான் மீதான போர் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நாட்டு மக்களின் நலன்களை அமெரிக்காவிடம் அடகு வைத்ததை கண்டித்தும், ஒன்றிய அரசிற்கு துணை போகும் அதிமுக கூட்டணியை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன், ஒன்றிய செயலாளர் கனகு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சின்னத்துரை, காளிமுத்து, மயில்சாமி, கிளை செயலாளர்கள் கார்த்திகேயன், வீரமணி, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
