பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு ஏலம் மூலம் 18.11 லட்சம் வருவாய்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூராட்சியில் நடந்த பொது ஏலம் மூலம், பேரூராட்சிக்கு 18.11 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி சார்பில் வாரச்சந்தை, தினசரி மார்க்கெட், பேருந்து கட்டணம், பொது கழிப்பிடம் குத்தகை உரிமம் பெற, பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமையில் பொது ஏலம் நடந்தது.

ஏலத்தில் முன்பணம் செலுத்தியவர்கள் மட்டும் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தினசரி மார்க்கெட் குத்தகை உரிமையை 6.11 லட்சத்திற்கு தினேஷ்குமாரும், வாரச்சந்தை உரிமை 7.59 லட்சத்திற்கு சோமசேகர், பேருந்து கட்டண சுங்க வரி உரிமை 3.76 லட்சத்திற்கு திவாகர், பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பிடம் 65 ஆயிரத்திற்கு ரமேஷ் ஆகியோர் ஏலம் எடுத்தனர். ஏலம் எடுத்தவர்கள் முழு ஏல தொகையையும் பேரூராட்சிக்கு செலுத்தியதாக பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தெரிவித்தார். ஏப்ரல் 1 முதல் ஒரு ஆண்டுக்கான குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: