கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா

அந்தியூர், பிப். 11:  ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அத்தாணியில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி வங்கி கிளையை துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது: விவசாயிகள் ஆடு, கோழி, மாடு வளர்ப்பதால் கையில் தினமும் பணம் கிடைக்க கூடிய முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். விவசாயிகள் மற்றும் யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு துணைத் தொழில் கையில் இருக்க வேண்டும் என்பதற்காக தான், முதலமைச்சர் இத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். இதையடுத்து 60 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சம் மதிப்பிலான சிறு வணிக கடன், கறவை மாடுகள் வளர்ப்பு உள்ளிட்ட கடன்களை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார். நிகழ்ச்சியில் அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், அத்தாணி நகர செயலாளர் திருமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: