தேங்காய் ஏலம்

மதுரை, பிப். 11: தமிழ்நாடு வேளாண் விற்பனை, வணிகத்துறையின் மதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் வாரம் இருமுறை நடக்கும். நேற்று மதுரை விற்பனை குழு கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் நடந்த ஏலத்தில் விவசாயிகளின் 16,376 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. அதிகபட்ச விலையாக ரூ.10.25க்கும், குறைந்தபட்சமாக ரூ 8.20க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.43 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது.

Related Stories: