சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,20,960க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 3 வாரத்திற்கும் மேலாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலின் காரணமாக கடந்த மாதம் 28ம் தேதி மற்றும் கடந்த 1ம் தேதி என 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.7000 வரை அதிகரித்தது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.30 ஆயிரம் அதிகரித்தது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 19,600க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,400க்கு விற்கப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.15,050க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கும் விற்கப்பட்டது.

அதே போல் இன்றும் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.15,120க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.300க்கும், கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: