சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கியது. 2ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.920, 3ம் தேதி பவுன் ரூ.1,560, 4ம் தேதி ரூ.2,120, 5ம் தேதி ரூ.640 என குறைந்து வந்தது. 5ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.14960க்கும், பவுனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு பவுன் 1 லட்சத்து 19,680க்கும் விற்பனையானது. வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் காணப்பட்டது.
அதாவது தங்கம் விலை அதிகரித்தது. நேற்று கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,050க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,20,400க்கும் விற்றது.வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,90,000க்கும் விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. இந்த நிலையில், இன்று மார்க்கெட் தொடங்கியதும் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2.90 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
