ஆர்டர்லி நடைமுறை ஐகோர்ட் அதிரடி

 

சென்னை: தமிழகத்தில் ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.சுரேந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறையில் ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் அடிப்படையில் ஆர்டர்லி முறை மாநிலம் முழுவதும் முழுமையாக ஒழிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலான அறிவுறுத்தல்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ஆர்டர்லி நடைமுறை தொடர்பாக வரும் புகார்கள் மீது விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆர்டர்லி முறையை ஒழிக்கும் கொள்கையை அமல்படுத்தவில்லை என்றால் மாவட்ட கலெக்டர்கள் மட்டுமில்லாமல், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் பணி விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: