சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஞ்சலை மற்றும் மலர்கொடி ஆகியோரை தவிர்த்து, அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப் உள்ளிட்ட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரவிட்டதோடு, உடனடியாக சரணடையவும் ஆணை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து, அஸ்வத்தாமன், பிரதீப், ஹரிஹரன், விக்னேஷ், சிவா, முகிலன் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், ஜாமீன் கோரி வழக்கில் தங்களது வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
