மகளிர் டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்தியா திணறல்

பெர்த்: இந்திய மகளிர் – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நேற்று துவங்கியது. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 4 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா 35 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்வந்தோரில் ஜெமிமா ரோட்ரிகஸ் சிறப்பாக ஆடி 52 ரன்கள் குவித்து விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் உட்பட மற்ற வீராங்கனைகள் கைகொடுக்காததால், 62.4 ஓவரில் இந்தியா, 198 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸி தரப்பில், அனபெல் சதர்லேண்ட் 4, லூசி ஹாமில்டன் 3, டார்சி பிரவுன் 2 விக்கெட் எடுத்தனர். அதையடுத்து, ஆஸி அணியின் துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஜார்ஜியா வால் (2 ரன்) சாயாலி சாக்ரி வீசிய 3வது ஓவரில் கிளீன் போல்டானார்.

மற்றொரு துவக்க வீராங்கனை போப் லிட்ச்பீல்ட், கிரந்தி கவுட் வீசிய 12வது ஓவரில் ஜெமிமாவிடம் கேட்ச் தந்து 9 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஆலிஸா ஹீலி, 13 ரன்னில், சாயாலி சாக்ரி பந்தில் வீழ்ந்தார். இருப்பினும், அடுத்து இணை சேர்ந்த எலிஸே பெரி (43 ரன்), அனபெல் சதர்லேண்ட் (20) சிறப்பாக ஆடி, பொறுப்புடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 27 ஓவரில் ஆஸி மகளிர், 3 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தனர்.

 

Related Stories: