பெண்கள் பொலிவுடன் இருக்க..!

நன்றி குங்குமம் தோழி

நீங்கள் அழகாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியே நினையுங்கள். ஆழமாக நினையுங்கள். அதோடு நீங்கள் அழகாய் இருப்பதாகவே நம்புங்கள். தீவிரமாக நம்புங்கள். இதோ நீங்கள் மிகவும் அழகாகி விட்டீர்கள்.

* ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமான அழகை உடையவர்கள். அதில் நீங்கள் ஒரு வகை அழகு. உங்கள் அழகை வேறு யாருடைய அழகுடனும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

* பெண்கள் தங்களுக்கென்று உள்ள வீட்டு வேலைகளை அந்தந்த நேரத்தில் முறையாகச் செய்து வந்தாலே போதும். அழகான தோற்றத்தை பெறலாம்.

* நீங்கள் உயரமான தோற்றத்தை கொண்டிருந்தால் சேலையை தரையில் புரளுமாறு தழையத் தழைய அணியுங்கள். ப்ளவுஸை கூடுமானவரை முழுங்கையை தொடுமாறு அணியுங்கள்.

* உடல் பருமனாக உள்ள பெண்கள் சற்று டார்க் ரோஜா வண்ணம், ஆரஞ்சு வண்ணம் ஆகிய கலர்களை உடுத்தினால் அழகாக தோன்றலாம்.

*மாநிறம் கொண்ட பெண்கள் வெண்மையான உடைகளை அணிந்தால் அழகாக இருக்கலாம். சேலையின் கலருக்கு முற்றிலும் மாறுபட்ட கலரில் பிளவுஸ் அணிந்தாலும் அளவான
உயரத்தில் காட்சி அளிக்கலாம்.

* மாடர்ன் டிரஸ் அணியும் உயரமான பெண்கள் நேர்க் கோடுகளை கொண்ட உடைகளை அணிய வேண்டும்.

உயரமாக வளர்ந்திருந்தாலும் அழகான தோற்றம் தரும்.

* முகத்திற்கு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை முட்டையின் மஞ்சள் கரு, நான்கு சொட்டு தேன், நான்கு சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்து புருவம், முடி நீங்கலாக தடவ வேண்டும். இதனால் முகம் பொலிவாக இருப்பதோடு, பருக்கள் வராமலும் தடுக்கலாம்.

* தினமும் பத்து டம்ளர் தண்ணீருக்கு குறையாமல் குடித்து வந்தால் கண்களை சுற்றி இருக்கும் கருமையான வளையம் மறைந்து விடும்.

* கைகளில் சுருக்கம் உள்ளவர்கள் இரவில் படுக்கப் போகும் முன் கிளிசரின், பன்னீர் இரண்டையும் கலந்து தடவிக் கொண்டு படுத்து காலையில் கழுவினால் கைகளில்
சுருக்கம் மறைந்து விடும்.

* தலைமுடி மிகவும் சுருட்டையாக உள்ளவர்கள் முதல்நாள் இரவில் வெந்தயத்தை ஊறப்போட்டு காலையில் அதை அரைத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் தலைமுடி சுருள்வது குறையும். மிருதுவாக இருக்கும்.

* புருவங்களில் போதிய அளவு முடி இருக்க தினமும் படுக்கப் போகும் முன் புருவங்களுக்கு கொஞ்சம் வாசலைனை தடவ வேண்டும்.

தொகுப்பு: ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

Related Stories: