நாமக்கல் தொகுதியில் யார் போட்டி மாஜி எம்எல்ஏவா? தொழிலதிபரா?: எடப்பாடி, தங்கமணி டிஷ்யூம்… டிஷ்யூம்…

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவது எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற மாஜி எம்எல்ஏவா? அல்லது தங்கமணியின் ஆதரவு பெற்ற தொழிலதிபரா? என்ற போட்டி, தேர்தல் களத்தில் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், குமாரபாளையம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் என்று 6 தொகுதிகள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக-பாஜ கட்சிகள் சார்பில் இந்த தொகுதிகளில் போட்டியிட நிர்வாகிகள் பல்வேறு வழிகளில் காய்நகர்த்தி வருகின்றனர். இதில் பாஜ மாநில துணைத்தலைவர்களாக இருக்கும் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி ஆகியோர் திருச்செங்கோடு, ராசிபுரம் தொகுதிகளில் போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமும் தொடர்ந்து தூண்டில் போட்டு வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க நாமக்கல் தொகுதி யாருக்கு? என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் தங்கமணிக்கும் எழுந்துள்ள கருத்துவேறுபாடு, அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நாமக்கல் நகர அதிமுக செயலாளர் பாஸ்கர் ஏற்கனவே நாமக்கல் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். கடந்த ேதர்தலிலும் அவருக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் வெற்றி கை நழுவிப்போனது. இதனால் இந்த முறையும் தனக்கு நாமக்கல் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து பாஸ்கர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைத்து வருகிறார். அதேநேரத்தில் மாநகர செயலாளர் பாஸ்கருக்கும், மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் தங்கமணிக்கும் இடையே கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது. அதனால் இந்த முறை பாஸ்கருக்கு பதில், அதிமுகவில் மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் தொழிலதிபர் தேவி மோகனை, களத்தில் இறக்குவதற்கு தங்கமணி முடிவு செய்துள்ளார். இதை மைன்டில் வைத்து அவரும், தொகுதி முழுவதும் உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் பாஸ்கரின் ஆதரவாளர்கள், தொகுதியின் பல்வேறு பகுதிகளில் கட்சி சின்னத்தை வரைய ஆரம்பித்துள்ளனர். தேவி மோகனின் தரப்பும் சில பகுதிகளில் இந்த வேலையை ெசய்து வருகிறது. இதனால் நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற மாஜி எம்எல்ஏவா? அல்லது தங்கமணியின் ஆதரவு பெற்ற தொழிலதிபரா? என்ற போட்டி, தேர்தல் களத்தில் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அதிமுக மூத்தநிர்வாகிகள் கூறுகையில், ‘‘நாமக்கல் தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், தங்கமணிக்கும் மாறுபட்ட கருத்துகள் உள்ளது. முன்னாள் எம்எல்ஏ பாஸ்கருக்கு வழங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இதனால் தங்கமணியோ, தனக்கு எதிராக எடப்பாடி காய்நகர்த்துகிறார் என்ற வருத்தத்தில் இருக்கிறார். தங்கமணியை பொறுத்தவரை சமீபகாலமாக எடப்பாடியை விட, பாஜகவுடன் அதிக நெருக்கத்தில் இருக்கிறார். இது அவருக்கு கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்கமணி பரிந்துரைக்கும் நபர்களுக்கு முடிந்தவரை சீட் கொடுக்க கூடாது என்ற எண்ணமும் அவருக்கு உள்ளது’’ என்றனர்.

Related Stories: