சென்னை: “கழக உடன்பிறப்புகள் மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் வரலாறு காணாத வகையில் 15,372 விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள்” என திமுக அறிவித்துள்ளது.
மேலும் “கழகத்தின் சார்பில் போட்டியிட15,372 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் பெறப்படும் என 20.02.2026 முதல் 06.03.2026 வரை தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு, விருப்ப மனு பெறுவது இன்றோடு நிறைவடைந்துள்ளது.
கழக உடன்பிறப்புகள் மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் வரலாறு காணாத வகையில் 15,372 விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர்.
கழகத்தலைவர் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கழகத்தின் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதியாகிவிட்ட உற்சாகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கழகத்தினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
