சென்னை :’தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “திருநங்கைகளுக்குத் தேவை கருணை அல்ல, சம வாய்ப்புகள் என்ற அடிப்படையில், முதன்முறையாகத் திருநங்கைகளை ஊர்க்காவல் படையில் நியமனம் செய்து, அவர்களைக் கண்ணியத்துடன் வாழ வழிவகை செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இப்படி திருநங்கைகளுக்காகப் பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.சென்னையில் சாலையோரம் வசித்த மக்களுக்கெல்லாம் ‘இரவு காப்பகங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் எல்லாம் ஆதரவற்றோர் அல்ல; நீங்கள் எல்லாம் ஆதரவு பெற்றவர்கள் என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்தை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார்,” இவ்வாறு கூறினார்.
