கருநாக்கமுத்தன்பட்டியை கண்காணிக்க 31 சிசிடிவி

கூடலுர் அருகே, கருநாக்கமுத்தன்பட்டியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், ரூ.4 லட்சத்தில் 31 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி அரசு ஆரம்பப்பள்ளியில் நடந்தது. முன்னாள் மாணவர் சங்க தலைவர் அரசு தலைமை வகித்தார். பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணி, கல்விப்புரவலர் நிதி குறித்து பேசினார். சங்க முத்திரையை அறிமுகம் செய்து வைத்த, உத்தமபாளையம் டிஎஸ்பி சின்னக்கண்ணு நூலக சிறப்பு, வாசிப்பு பழக்கம் ஆகியவை குறித்து பேசினார். இதில், கலந்து கொண்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி, ‘பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம் அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.

7 முறை பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, கள்ளர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை பாராட்டி நினைவுப் பரிசும், முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், போலீசார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கருநாக்கமுத்தன்பட்டி முன்னாள் மாணவர்கள் சங்கம் செய்திருந்தது.

Related Stories: