கொழும்பு : இலங்கை கடல்பகுதியில் ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்கியதில் கடலில் மூழ்கி 101 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கடலில் தத்தளித்த 30 பேரை இலங்கை கடற்படை உயிருடன் மீட்ட நிலையில் மற்றவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் மூலம் அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
