பசுபதிபாண்டியன் கொலை வழக்கு வக்கீல் உள்பட 7 பேர் சாட்சியம்

திண்டுக்கல், பிப்.10: தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியன், திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் கடந்த 2012ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது  நந்தவனபட்டியை சேர்ந்த வக்கீல் ஜெயசங்கர், ரவி, இந்திராகாந்தி, மணியன், தங்கரத்தினம், கோவில்பட்டியை சேர்ந்த மதன்ராஜ், ராஜபாளையத்தை சேர்ந்த கோதண்டராமன் ஆகிய 7 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் மாணிக்கம் வாதாடினர். இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகின்ற 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.

Related Stories: