ஏஐ தொழில்நுட்ப ஆதிக்கத்தால் ‘பிளாக் இன்க்’ நிறுவனத்தில் 4,000 ஊழியர்கள் பணிநீக்கம்

 

சான் பிரான்சிஸ்கோ: பன்னாட்டு நிதி நிறுவனம் தனது 4,000 பணியாளர்களை பெருமளவில் குறைப்பதாக அறிவித்துள்ளது. பிரபல தொழிலதிபரான ஜாக் டோர்சி தலைமையிலான ‘பிளாக் இன்க்’ (முன்பு ஸ்கொயர்) நிறுவனம், கடந்த காலங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை துறையில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்தது. ஸ்கொயர், கேஷ் ஆப் மற்றும் ஆஃப்டர்பே போன்ற செயலிகள் மூலம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், நேற்று நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 40 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக ஜாக் டோர்சி அறிவித்தார். இதன் மூலம் 4,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரே நாளில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் இந்த கடுமையான திட்டமிடல் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தின் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜாக் டோர்சியின் அறிவிப்பால் பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 24 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 20 வார சம்பளம் மற்றும் 5,000 டாலர் இடைக்கால நிதி உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆறு மாத கால மருத்துவ காப்பீடும் வழங்கப்பட உள்ளது.

Related Stories: