வாஷிங்டன்: திருமணத்தை மீறிய ரஷ்ய பெண்களுடன் உறவு இருந்தது உண்மைதான் என்றும் அதற்காக பில்கேட்ஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கி வந்தவர். இதற்காக அவர் தனி தீவே வைத்திருந்தார். இவர், கடந்த 2019 ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி சிறையில் உள்ள தனது அறையில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பில்கேட்ஸ், எப்ஸ்டீனுக்கு இடையிலான பல சந்திப்புகளை விவரிக்கும் படங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பில்கேட்ஸை சுற்றி பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ், தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் பொது மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக, அறக்கட்டளை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டவுன் ஹால் கூட்டத்தின்போது பில்கேட்ஸ், தனது செயல்களுக்கு பொறுப்பேற்றார். அங்கு அவர் எப்ஸ்டீனுடனான தனது உறவுகளை சுற்றியுள்ள கேள்விகளுக்கு பதிலளித்தார். டவுன் ஹாலில் எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ரஷ்ய பெண்களுடன் உறவு அவருக்கு இருந்தது.
அவை எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையது இல்லை. எப்ஸ்டீனுடன் நேரத்தை செலவிட்டதும், மூத்த அறக்கட்டளை நிர்வாகிகளை அவருடன் சந்திப்புகளில் ஈடுபடுத்தியதும் ஒரு பெரிய தவறு. அந்த தவறு காரணமாக இதில் ஈர்க்கப்பட்ட மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். 2014 வரை எப்ஸ்டீனை சந்தித்ததோடு, அவருடன் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பயணித்துள்ளார். ஜெர்மனி, பிரான்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் அவருடன் நேரத்தை செலவிட்டார். ஆனால் ஒருபோதும் எப்ஸ்டீனின் தீவுக்கு சென்றதில்லை’ என்று கூறப்பட்டுள்
ளது.
