ஐநா சபையில் உக்ரைன் தீர்மானத்தில் இந்தியா விலகல்: 107 நாடுகள் ஆதரவு

நியூயார்க்: ஐநா சபையில் உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து கொண்டுவரப்பட்ட உடனடி போர்நிறுத்த தீர்மான வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியது. 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில் 107 நாடுகள் ஆதரவு தெரிவித்தது, 12 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 51 வாக்கெடுப்பில் இருந்து விலகியுள்ளது. போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 5ம் ஆண்டை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா முன்னிலையில் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

எனவே, போர் நிறுத்தம் செய்வதற்காக உலக நாடுகளின் ஆதரவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திரட்டி வருகிறார். இந்த சூழலில், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை உடனடியாக நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்து, ஐநா சபையில் வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், போலாந்து உள்பட 107 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

Related Stories: