அந்தமானில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: நடுக்கடலில் சிக்கிய 7 பேர் மீட்பு

ஸ்ரீவிஜயுரம்: அந்தமானில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கடலில் சிக்கித் தவித்த 7 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அந்தமானின் போர்ட் பிளேரில் இருந்து ரங்காட்டுக்கு நேற்று ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் விமானி, 5 பயணிகள் உட்பட மொத்தம் 7 பேர் பயணம் செய்தனர். ஸ்ரீவிஜயபுரத்தில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்ட விமானம் சுமார் 9.30மணியளவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்த தகவலின்பேரில் விரைந்த மீட்பு படையினர் கடலில் சிக்கிய 2 விமானிகள் உட்பட மொத்தம் 7 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். அனைவரும் மாயபந்தரில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Related Stories: