சியோல்: வட கொரியா தலைவர் வட கொரியாவின் தற்போதைய உச்ச தலைவர் கிம் ஜோங் உன்(42) தனது தந்தை கிம் ஜோங் இல் மறைவுக்கு பின் 2011 முதல் பதவியில் இருந்து வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தொழிலாளர் கட்சியின் மாநாடு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய கிம் ஜோங், பொருளாதார தடையால் பாதிக்கப்பட்ட தனது நாட்டில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. எனினும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த திட்டங்கள் வகுக்கப்படும். உணவு உற்பத்தியில் பாதிக்கப்பட்டு பஞ்சம் நிலவிய போதும், அணு ஆயுதங்களுக்கும், ராணுவ வலிமைக்கும் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தன என் பேசினார்.
மாநாட்டில் அடுத்த ஆண்டுகளுக்கான அரசியல் மற்றும் ராணுவ திட்டங்களை கிம் ஜோங் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் சக்திவாய்ந்த தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டியில் 138 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டியில் வயதான ராணுவ தலைவர்கள், 76 வயதான நாடாளுமன்றத்தின் தலைவர்உட்பட ஏராளமானோர் மாற்றப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் கட்சி மாநாட்டில் அணு ஆயுத திறன்களை வலுப்படுத்தி வருவது, ரஷ்யா, சீனாவுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்தியதற்காக கிம்முக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டின் நான்காவது நாளான நேற்று முன்தினம் கட்சியின் பொது செயலாளராக கிம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .
