தேர்தலையொட்டி ரேக்ளா பேரணி விழிப்புணர்வு

 

பாலக்காடு,ஏப்.7: பாலக்காடு மாவட்டத்தில் ஏப்.9ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் ஆணையத்தின் சார்பில் ரேக்ளா பேரணி மூலம் தேர்தல் விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த பேரணியை சப்-கலெக்டர் ரவி மீணா, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி ஸ்டேியம் பஸ் நிலையம், சுல்தான்பேட்டை சந்திப்பு, தாரைக்காடு சாலை, சகுந்தளா சந்திப்பு, டவுன் பஸ்நிலையம், மிஷன் பள்ளி, எஸ்.பி.ஐ சந்திப்பு வழியாக திரும்ப ஒருங்கிணைந்த அரசு வளாகத்தை வந்தடைந்தது. மலம்புழா சட்டமன்ற தேர்தல் அதிகாரி ஜோண்சன், துணை தாசில்தார் அஜித்குமார், கோங்காடு சட்டமன்ற தேர்தல் அதிகாரி சந்தோஷ் ஆகியோர் உட்பட ஏராளமான ரேக்ளா பந்தய வீரர்களும், விவசாயினரும், பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

Related Stories: