சித்திரைக்கனி தரிசனம் பார்க்க குருவாயூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பாலக்காடு, ஏப். 14: கேரளாவில் சித்திரை திருவிழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி பழங்கள் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் குறைந்த அளவில் பழங்களை வாங்கி செல்கின்றனர். பலாப்பழம் கிலோ ரூ.50 முதல் ரூ.60க்கும், வாழைப்பழம் கிலோ ரூ.80க்கும், வெள்ளரி கிலோ ரூ.70க்கும், மாம்பழம் கிலோ ரூ.100 முதல் ரூ.150க்கும் விற்பனையானது. சித்திரைக்கனி திருவிழாவை முன்னிட்டு வீடுகளில் முக்கனிகள் படைத்து புதிய ரூபாய் நோட்டுகள், காயின்கள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவர். மேலும், குருவாயூர் கோயிலில் தரிசனம் பார்த்து மேல்சாந்தியினரிடம் கைநீட்டம் மற்றும் பிரசாதம் வாங்குவது என்பது மாபெரும் புண்ணியம் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.

வெளிமாவட்ட தொழிலாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை ஓட்டு போடுங்க மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ வேட்பாளர் கிருத்திகா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை வெளியுலகத்திற்கு தலைக்காட்டாத அவர், தற்போது வயல்வெளிகளில் பணியாற்றி வரும் விவசாய கூலித்தொழிலாளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். ஆனால், அத்தொழிலாளர்கள் சொந்த ஊரை சேர்ந்தவர்களா? அல்லது பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களா என்பதை அறியாமல், தொழிலாளர்களுடன் இணைந்து போட்டோ சூட்டிற்கு போஸ் கொடுத்து வருகிறாராம்.

ஏனென்றால், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், மொடக்குறிச்சி, சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் தங்கி விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பாஜ வேட்பாளர் கிருத்திகா சந்தித்த பெரும்பாலான விவசாயிகள், பிற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளே. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களே தங்களின் சொந்த மாவட்டங்களை வெளிப்படையாக கூறியும், பரவாயில்லை என சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்துள்ளார் கிருத்திகா. பின்னர், காரில் ஏறியதும் உள்ளூர் தொழிலாளர்களா, வெளிமாவட்ட தொழிலாளர்களா என்பதை விசாரித்து தெரிந்த பிறகு தன்னை அங்கு அழைத்து சென்றிருக்கலாமே என்று உதவியாளர்களிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தினாராம்.

Related Stories: