மச்சிக்கரை பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் வாழைத் தோட்டம் சேதம்

கூடலூர், ஏப்.12: கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வந்த காட்டு யானைகள் இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழை தோட்டத்தில் புகுந்தது. தொடர்ந்து விவசாயிகள் பயிரிட்டிருந்த நேந்திரன் வாழை மரங்களை சேதப்படுத்தியது. வாழை மரங்களில் காய்கள் பிடித்து அறுவடைக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் உள்ள நிலையில், விவசாயி உமேஷ் என்பவரின் தோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகளை யானைகள் சேதப்படுத்தியது.

இதேபோல பாகற்காய் பந்தல்கள் வழியாக யானை நடந்து சென்றதால் பாகற்காய் பந்தல்களும் சேதம் அடைந்துள்ளன. அடிக்கடி ஊருக்குள் வரும் இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி கண்காணிப்பதோடு விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Related Stories: