நாதகவை கண்டு கொள்ளாத கிழக்கு தொகுதி மக்கள்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, ஆர்எஸ்எஸ்சின் அடிவருடி, பாஜவின் பீ டீம் என பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், பிராமண கடப்பாரையை கொண்டு பெரியாரை அகற்றுவோம் என ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பேசியிருந்தார். அதுமட்டுமின்றி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது, அருந்ததியர் சமூகத்தை இழிவுப்படுத்தி பேசியதற்காக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இதனால் நாதகவின் மீது கிழக்கு தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாண்டவமூர்த்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், அத்தொகுதி மக்கள் நாதக-வை கண்டுக்கொள்வதே இல்லையாம். மேலும், அத்தொகுதியில் 30 சதவீதம் சிறுபான்மையாக உள்ள இஸ்லாமியர்கள் பலர், நேரடியாகவே எங்களின் வாக்கு திமுகவிற்கு தான் என முகத்தில் அறைந்தது போன்று கூறி விடுகிறார்களாம். இதனால், டெபாசிட் கிடைப்பதே அக்கட்சிக்கு பெரும்பாடு ஆகியுள்ளது.

Related Stories: