திருவிடைமருதூரில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.32 லட்சம் மதிப்பில் தட்டு வண்டிகள்

திருவிடைமருதூர், பிப்.25: திருவிடைமருதூரில் ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 500 மதிப்பீட்டில், 15 சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக தட்டுவண்டிகளை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார். திருவிடைமருதூர் எம்எல்ஏ அலுவலகத்தில் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த சாலையோர பகுதிகளில் வியாபாரம் செய்யும் 15 ஏழை, எளிய சாலையோர வியாபாரிகளுக்கு அவர்களின் தொழிலை மேம்படுத்தும் வகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன் ஆகியோர் முன்னிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தனது சொந்த நிதியில் ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் இலவசமாக 15 தட்டுவண்டிகளை வழங்கினார்.

மிசா மனோகரன் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இலவசமாக வழங்கப்பட்ட இந்த விற்பனை தட்டுவண்டி மூலம் சாலையோர விற்பனையாளர்கள் தங்கதொழிலை விரிவுபடுத்தி, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்தை அடைவார்கள். மக்களின் வாழ்க்கையில் நேரடி மாற்றத்தை கொண்டு வரும் மக்கள் நலஅரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

 

Related Stories: