பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஸ்டாலினின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்

பெரம்பலூர், பிப். 19: பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஸ்டாலினின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் பரப்புரை பாடல் டவுன்லோட் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் நகரில் பாலக்கரை அருகே உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்! பரப்புரை பாடலை க்யூ-ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்யும் நிகழ்ச்சி மாவட்டச்செயலாளர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில நிர்வாகிகள் துரைசாமி, பரமேஷ்குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் குன்னம் இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெகதீஸ்வரன், டாக்டர் வல்லபன், அரும்பாவூர் பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன், திமுக பொதுக்குழுஉறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளர் நூருல் ஹிதா இஸ்மாயில், வழக்கறிஞர் செந்தில்நாதன்,

மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், திமுக இளைஞரணி அமைப்பாளர் சுப்பிரமணி, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கே.கே குமார், நகராட்சி துணைத் தலைவர் ஆதவன், மதுபாலன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் விஜய், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: