பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்: பொதுமக்கள் பங்கேற்பு

பெரம்பலூர்,பிப்.20: பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோயிலில் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம். பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று காலை தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன்படி தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், பழச் சாறு வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், ராஜா மற்றும் பெரம்பலூர், துறைமங்கலம் அரண்மனை உட்பட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு குரு அருள்பெற்றுச் சென்றனர். பூஜைகளை முல்லை சிவாச்சாரியார் செய்து வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

 

Related Stories: