சென்னை ரேஸ் கிளப்பிடம் இருந்து ரூ.6.43 கோடி சொத்து வரி பாக்கி வசூலை நிறுத்தி வைக்க மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை : சென்னை ரேஸ் கிளப்பிடம் இருந்து ரூ.6.43 கோடி சொத்து வரி பாக்கி வசூலை நிறுத்தி வைக்க மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ரேஸ் கிளப் தரப்பு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கவும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். 2001-02 முதல் 2007-08 வரை சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி பாக்கியை செலுத்தக்கோரிய நோட்டீஸை எதிர்த்து ரேஸ் கிளப் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

Related Stories: