திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட – பழங்குடியின மக்கள் இந்திய அளவில் சிறப்பான முன்னேற்றம்: தமிழக அரசு

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட – பழங்குடியின மக்கள் இந்திய அளவில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.ஐ.டி, என்.ஐ.டி என உயர்கல்வி நிறுவனங்களில் நடப்பாண்டில் 135 ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் சேர்ந்தனர். அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.162.54 கோடி உதவித்தொகை, 1,048 பெண்களுக்கு ரூ.49.35 கோடி மானிய உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. 1,29,689 தூய்மை பணியாளர்கள் சுயதொழில் தொடங்க மானியம் வழங்கப்படுகிறது என ஆதிதிராவிட, பழங்குடியினர் நலத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: