வெள்ளாளவிடுதி கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

*திமுக தெற்கு ஒன்றிய இளைஞர் அணி நடத்தியது

கந்தர்வகோட்டை : வெள்ளாளவிடுதி கிராமத்தில் திமுக தெற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளவிடுதி ஊராட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றிய இளைஞர் அணி, மதுரை அரவிந்த் கண் மருந்துவமனை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பார்வை தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் முகாம் வெள்ளாள விடுதி அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், அவர்களுக்கு முதல் சோதனை செய்து தொடங்கி வைக்கபட்டது. முகாமில் 102 மருந்துவ பயனாளிகள் கலந்து கொண்டதில் 25 நபர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருந்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.

இதில் மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் தமிழ்ராஜா, ஆதித்தியா துரைராஜா, நகர செயலாளர் ராஜா, மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், ஜானகிராமன், இளைஞர் அணி அமைப்பாளர் கலையரசன், துணை அமைப்பளர் நமச்சிவாயம், சுரேஷ் மற்றும் அரவிந்த் கண் மருந்துவமனை மருந்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: