2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா

 

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்டுள்ளோம் என திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். அதிக தொகுதிகளை கேட்டுள்ளோம்; முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளனர். இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான்; மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறியுள்ளனர். இந்த முறையும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம் ஜவாஹிருல்லா என்று கூறினார்.

 

 

Related Stories: