×

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் திரிணாமுல் காங்.கில் ஐக்கியம்

கொல்கத்தா: மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பிரதிக்கூர் ரஹ்மான். இவர் கடந்த மக்களவை தேர்தலில் டயமண்ட் ஹார்பர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அபிஷேக் பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். சில நாட்களுக்கு முன் பிரதிக்கூர் ரஹ்மான் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார். ரஹ்மான் கூறுகையில், கட்சி நடவடிக்கைகளினால் மிகுந்த அதிருப்தியடைந்தேன். இது ஒரு டிரைலர் தான், முழு படம் இன்னும் உள்ளது என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் பாஜ அதிருப்தி எம்எல்ஏ பிஷ்ணு பிரசாத் சர்மா ஆளும் கட்சியில் சேர்ந்தார்.

Tags : Marxist ,Trinamool Congress ,Kolkata ,West Bengal Marxist Party ,Pratikur Rahman ,Lok Sabha ,Diamond Harbour ,Abhishek Banerjee ,Trinamool Congress party ,
× RELATED உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை...