×

ரவுடி கொலை வழக்கில் கைதான பாஜ எம்.எல்.ஏ சிறையில் அடைப்பு

பெங்களூரு: பெங்களூருவில் ரவுடி பிக்லு சிவா கொலை வழக்கில் பாஜ எம்.எல்.ஏ பைரதி பசவராஜ் கடந்த 12ம் தேதி அகமதாபாத்திலிருந்து பெங்களூரு வந்தபோது கைது செய்யப்பட்டு, சிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டார். பைரதி பசவராஜின் சிஐடி காவல் முடிந்த நிலையில், நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பைரதி பசவராஜை பிப்ரவரி 26ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி, உத்தரவிட்டார். இதையடுத்து பாஜ எம்.எல்.ஏ பைரதி பசவராஜை சிஐடி போலீசார், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

Tags : BJP MLA ,Bengaluru ,Pairathi Basavaraj ,Ahmedabad ,Biklu Shiva ,CID ,
× RELATED உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை...