- சட்டமன்ற உறுப்பினர்
- தேஜாஸ்வி யாதவ்
- பீகார்
- பாஜக
- மைதிலி தாக்கூர்
- லாலு பிரசாத் யாதவ்
- திருதராஷ்டிரன்
- லாலு
- Tejaswi
- மைதிலி
லாலுபிரசாத் யாதவை திருதராஷ்டிரருடன் ஒப்பிட்டு பேசிய பீகார் பா.ஜ எம்எல்ஏ மைதிலி தாக்கூருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். எப்படி லாலு பெயரை குறிப்பிடாமல் மைதிலி தாக்கூர் பேசினாரோ அதே போல் மைதிலி பெயரை குறிப்பிடாமல் தேஜஸ்வி பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில்,’ சிலர் சட்டமன்ற உறுப்பினரானவுடன் அரசியல் பற்றிய முழுமையான அறிவு இருப்பதாக நினைக்கிறார்கள்.
சட்டமன்றத்தின் ஏபிசி கூட புரிந்து கொள்ளாமல், ஒரு மக்களின் ஹீரோவை(லாலுபிரசாத்யாதவ்) பற்றி இழிவான கருத்துக்களை வெளியிடும் துணிச்சல் அவர்களுக்கு உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, தனது சொந்தத் தொகுதியான தர்பங்கா மாவட்டத்தில், ஒரு தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போது கண்களையும், வாயையும் மூடி அமைதியாக இருந்தது யார்?’ என்று கேள்வி எழுப்பினார்.
