×

டி20 உலக கோப்பை சூப்பர் 8ல் ‘விளையாடியது’ மழை: நியூசி – பாக். போட்டி ரத்து

கொழும்பு: இந்தியா, இலங்கையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 8 அணிகள் சூப்பர் 8 பிரிவுக்கு தகுதி பெற்றன. சூப்பர் 8 குரூப் 1 பிரிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கின்றன. குரூப் 2 பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை அணிகள் விளையாட உள்ளன.

கொழும்புவில் நேற்று சூப்பர் 8 சுற்று போட்டிகள் துவங்கின. குரூப் 1 பிரிவில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. போட்டி துவங்கப் போகும் முன்பு மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

Tags : T20 World Cup Super 8 ,Zealand ,Pakistan ,Colombo ,T20 World Cup ,India ,Sri Lanka ,Super 8 ,South… ,
× RELATED உலக கோப்பை: நியூசிலாந்து – பாகிஸ்தான்...