×

ஓமன் அணிக்கு எதிராக ஆஸி ஆறுதல் வெற்றி

பல்லேகெலே: ஐசிசி உலகக் கோப்பை டி20, கடைசி லீக் போட்டி, பல்லேகெலே நகரில் நேற்று நடந்தது. அதில் ஆஸ்திரேலியா – ஓமன் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஓமன் அணியின் துவக்க வீரர்கள் ஆமிர் கலீம் ரன் எடுக்காமலும், கேப்டன் ஜதிந்தர் சிங் 17 ரன்னிலும் வீழ்ந்தனர். அடுத்து வந்த வீரர்களில் வாஸிம் அலி (32 ரன்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். அதனால், 16.2 ஓவரில் ஓமன் 104 ரன்னுக்கு சுருண்டது. பின்னர் களமிறங்கிய ஆஸி அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் மிட்செல் மார்ஷ் (ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 64 ரன்), டிராவிஸ் ஹெட் (32 ரன்னில் அவுட்), ஓமன் பந்து வீச்சை சிதறடித்து ரன்களை குவித்தனர். 9.4 ஓவரில் ஆஸி ஒரு விக் இழப்புக்கு 108 ரன் குவித்து ஆறுதல் வெற்றி பெற்றது.

Tags : Oman ,Pallekele ,ICC World Cup T20 ,Australia ,Aamir Kaleem ,Jatinder… ,
× RELATED The Hundred கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான்...