ஜோகனஸ்பெர்க்: 10வது டி 20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள தென்ஆப்ரிக்க அணி மார்ச் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேஷவ் மகராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் பார்ட்மென், ஈதன் போஷ், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, கானர் எஸ்டெர்ஹூய்சன், டயான் பாரெஸ்டர், ஜோர்டான் ஹெர்மன், ரூபின் ஹெர்மன், ஜார்ஜ் லிண்டே, மொகீனா, பிரினெலன் சுப்ராயன், ஆண்டிலே சிமிலேன், லூத்தோ சிபம்லா, ஜேசன் ஸ்மித் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
