சால்வை போர்த்துவது போல திமுக நிர்வாகிக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது

வேடசந்தூர்: சால்வை போர்த்துவது போல, திமுக நிர்வாகியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் வேடசந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீரா.சாமிநாதன். இவர், வீட்டில் பொதுமக்களை தினமும் சந்தித்து குறைகளை கேட்பது வழக்கம். நேற்று காலை வீரா.சாமிநாதன் இல்லத்தில் இருந்தபோது, எரியோடு பெருமாள்கோவில்பட்டி அருகே மத்தனம்பட்டியைச் சேர்ந்த மணி (27), சால்வை போர்த்துவதாக கூறி, மறைத்து வைத்திருந்த கத்தியால் வீரா.சாமிநாதனின் கழுத்தின் பின்பகுதியில் குத்தியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த கொளத்தூர் காலணம்பட்டியைச் சேர்ந்த நாச்சிமுத்து தடுக்க முயன்றார். அவரையும் இடுப்பில் குத்திய வாலிபர், அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மணியைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த வீரா.சாமிநாதன், நாச்சிமுத்து ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து மணியை கைது செய்தனர்.

 

Related Stories: