மதிமுக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: வைகோ அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் வைகோவின் மதிமுகவின் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்துள்ளனர்.

இந்த குழுவியில் இருப்பவர்கள், திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள். அந்த குழுவில் அவைத் தலைவர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதீபன், உயர்நிலை குழு உறுப்பினர் ஜீவன் மற்றும் தேர்தல் பணி செயலாளர் சேஷன் ஆகியோர் இருப்பார்கள் என கட்சியின் பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள குழுவினர் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: