திருத்துறைப்பூண்டி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தாசில்தார் ஆய்வு

திருத்துறைப்பூண்டி, பிப். 21: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 56 அரசுநெரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி வட்டாட்சியர், தனி வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், சரக வருவாய் ஆய்வாளர்கள் தனித்தனியாக ஆய்வு செய்தனர்.

இதில் அரசு நெரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழை முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கை குறித்து விசாரித்தனர். இதே போன்று திருத்துறைப்பூண்டி- 1, திருத்துறைப்பூண்டி -2, நுணாக்காடு, வரம்பியம், விட்டுக்கட்டி, தேசிங்குராஜபுரம் ஆகிய 6 இடங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழை முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கை குறித்து தாசில்தார் பரமேஸ்வரி ஆய்வுசெய்தார்.

 

Related Stories: